வவுணதீவு பிரதேச மட்ட சிறுவர் கண்காணிப்புக் குழுக்கூட்டம் 14.03.2013 அன்று வவுணதீவு பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் திரு V . தவராஜா அவர்களின் தலைமையில் பிரிவு சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் திரு T . பிரபாகரன் அவர்களின் ஒழுங்கமைப்பில் மு. ப. 10.00 மணிக்கு இடம்பெற்றது.
இந்நிகழ்வில் வவுனதிவு பிரதேச சபை தவிசாளர் கௌரவ் பிறைசூடி அவர்கள், உதவி பிரதேச செயலாளர் திரு ராஜ்குமார் , மாவட்ட செயலக மாவட்ட இணைப்பாளர் திரு வீ. குகதாசன் , நன்னடத்தை உத்தியோகத்தர் திரு M . வரதராஜன்,கிராம உத்தியோகத்தர்கள் பாடசாலை அதிபர்கள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், கிராம மட்ட சிறுவர் உரிமை கண்காணிப்பு குழுக்களின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்வில் கடந்த கூட்டத்தின் கூட்டறிக்கை வாசிக்கப்பட்டதுடன் பிரதிநிதிகளின் கருத்திகுக்கள் இடம்பெற்றது. குறிப்பாக பிரதேச செயலாளர் அவர்கள் பிரதேசத்தில் பணியாற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் சிறுவர் சார்ந்த செற்பாடுகள் குறித்து வினவினார், இது தொடர்பில் பிரதிநிதிகள் தமது வேலையின் முன்னேற்றப்போக்குகள் தொடர்பாக குறிப்பிட்டனர். அதன் பொது பிரதேஷ் செயலளர் அவர்கள் நிறுவனங்களின் வேலைகள் அனைத்தும் பிரதேச செயலகத்தினஹ்டும் உரிய உத்தியோகத்தரின் ஒருன்கினைப்புடனும் மேட்கோள்ளப்பட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
தொடர்ந்து VCRMC பிரதிநிதிகளின் கருத்துக்கள் கூறப்பட்டன இதில் ஒவ்வொரு பிரிவு VCRMC உம கிராம மட்டத்தில் காணப்படும் இல வது திருமணம், பாடசாலை இடைவிலகல், தாய்மார் பிள்ளைகளை விட்டு வெளிநாடு செல்லுதல், போன்ற பல் பிரச்சைனக்ளுக்கு சுயமாகவும், தேவையானபோது அரச அதிகாரிகளின் ஒத்துழைப்புடனும் கிராம மட்டப் பிரச்சனைகளை தீர்பதற்கு தலையிடுவது முக்கியமானதும் வரவேட்கத்தக்கதொரு விடயமாகவும் இருந்தது. அதேவேளை குறிப்பிட்ட இடங்களில் காணப்படுகின்ற பாடசாலை இடைவிலகல் பிரச்சனைகள் தொடர்பாக ஒரு விசேட குழுவை அமைத்து நடவடிக்கை எடுபபதட்குமென தீர்மானம் எடுக்கப்பட்டதுடன் ஒரு ஆக்கபூர்வமான கூட்டமாக் ஐது நடைபெற்று முடிந்தது.
No comments:
Post a Comment