plan srilanka நிறுவனத்தின் சிறுவர் பாதுகாப்பு வேலைத்திட்ட ஆரம்ப நிகழ்வு 12.03.2013 இன்று மு. ப. 10.00 மணிக்கு மண்முனை வடக்கு பிரதேச DERBA மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கிழக்கு மாகான பிரதம செயலாளர் திரு D . M . S . அபயகுணவர்த்தன அவர்கள் தலைமை தாங்கினார். அத்துடன் கிழக்கு மாகாண நன்னடத்தை திணைக்கள ஆணையாளர்
ஜனாப் முபாரக் அவர்களும் , மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் அவர்களும், மட்டக்களப்பு போதன வைத்திய சாலை உலா வைத்திய நிபுணர் Dr கடம்பநாதன், மற்றும் மக்கன க்ல்விதினைக்கள பணிப்பாளர், சிறுவர் வைத்திய நிபுணர்கள், மனநல வைத்தியர்கள, பிராந்திய சுகாதார சேவைகள் திணைகள் அதிகாரிகள், நன்னடத்தை திணைக்கள அதிகாரிகள், மற்றுன் பிளான் ஸ்ரீலங்கா நிறுவனத்தின் இலங்கைக்கான பிரதிநிதி எனப்பலரும் கலந்து கொண்டனர்,
அத்துடன் இந்நிகழ்வில் உரையாற்றிய பிரதம செயலாளர் அவர்கள் ஒரின்கினைந்த வேலை ( Colloborative work ) என்ற கருத்துப்பட உரையாற்றினார். இதில் அவர் பிள்ளைகளின் பாதுகாப்பு என்பது அவர்களின் உரிமை சார்ந்து நோக்க வேண்டியது என்பதுடன் இதில் முக்கியமாக அவர்களின் அப்ங்கு அவசியம் எனவும் குறிப்பாக பிள்ளைகளின் உயிர்வாழ்தல் பாதுகாப்பு , அபிவிருத்தி, மற்றும் பங்களிப்பு என்பன குறித்து கவனம் செலுத்தி பணியாற்றுதல் வேண்டும் எனவும் அதேவேளை சிறுவர் பாதுகாப்பு என்பது ஒரு பல்துறை சார்ந்த அனுகுமுரயாக் உள்ள காரணத்தினால் இங்கு உள்வாங்கப்பட்டுள்ள , அனைத்து தரப்பினரதும் இணைப்புடன் மேட்கொள்ளப்பாத் வேண்டும் எனவும் தெரிவித்தார். இது தவிர கிழக்கு மாகாணத்தில் பாடசாலி இடை விலகல் அத்தோடு அரசாங்க அதிபர் அவர்கள் கிரிப்பிட்ட பிரத்தியேக கல்வி நிலையங்களில் பிள்ளைகளின் நலன் பேணப்படல் குறித்தும் அதிக கவனம் செலுத்தி மாகாண கல்விப்பணிப்பாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.
இவை தவிர சிறுவர் பாதுகாப்பில் நாங்கள் எங்கே இருக்கிறோம் என்ற தொனிப்பட உரோ சமர்ப்பணம் ஒன்றை Dr கடம்பநாதன் அவர்கள் அளித்திருந்தார். இதில் தற்போதைய பாதுகாப்பு பொறிமுறை முன்னேற்ற கரமான போக்கில் இருந்தாலும் பல் விடயங்களில் பிள்ளைகளின் நலன் குறித்து கூடாய கவனம் செலுத்த வேண்டி உள்ளது எனவும் அதில் குறிப்பாக
1. பிள்ளைகளுக்கு அவர்களின் அவசர பாதுகாப்பு தேவைகள் குறித்து கவனம் செலுத்துதல்
2. தொடர் கண்காணிப்பு
போன்ற விடயங்களில் அதிக கவனம் செலுத்துவதுடன் மிக முக்கியமாகக சந்திசமான ஒரு குடும்ப சூழலை எவ்வாறு ஏற்படுத்துவது எனபது தொடர்பில் கவனம் செலுத்தி பணியாற்றில் நல்லது எனவும் கேட்டுக் கொண்டதுட தற்கொலை வீதம் அதிகரித்துள்ளதாகவும் 2011 ஆம் ஆண்டில் இருந்த இவ்விகிதசாரம் 2012 இலும் அதே சமநிலையில் காணப்படுவதாகவும் தெரிவித்தார்.
இறுதியில் அனைவரதும் குழுக்கலந்துரயாடல் ஓன்று இடம்பெற்றதுதுடன் மேலும் இவ்வாறான ஒரு கலந்துரையாடலை மீண்டும் ஏற்படுத்த வேண்டிய அவசியம் ஒன்று உள்ளது என அணியாளர் அவர்களால் குறிப்பிடப்பட்டு நிகழ்வு நிறைவு பெற்றது.
No comments:
Post a Comment