இருமொழி தேர்ச்சி கொண்ட பிள்ளைகளை வளர்ப்பதற்கான நுட்பங்கள்.. Techniques for Promoting Bilingual/Multilanguage Skilled Children....

Can translate to read in your own language

Tuesday, May 7, 2013

பிரதேச சிறுவர் கண்காணிப்பு குழுக் கூட்டம்

DSC03510மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் பிரிவின் பிரதேச சிறுவர் கண்காணிப்பு குழுக் கூட்டமானது பிரதேச செயலாளரும் குழுவின் தலைவருமான திரு எஸ் . சுதாகர் அவர்களின் தலைமையில் கடந்த 29.04.2013 பி.ப 2.30 மணிக்கு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.கூட்டத்தில் சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தரும் பிரதேச கண்காணிப்பு குழுவின் செயலாளருமான திரு கே. எம் . புவிதரன் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். இக்கூட்டத்தில் உதவி பிரதேச செயலாளர் திரு எஸ். ரங்கநாதன் ப்புஹ்க் சேவை உத்தியோகத்தர்களுக்கான நிர்வாக உத்தியோகத்தர் திரு ராஜதுரை மற்றும் மண்முனை தென் எருவில் பற்று கோட்டக் கல்வி அதிகாரி திருவாளர் எஸ். பாலச்சந்திரன் ஆகியோருடன் போலீஸ் அதிகாரிகள், அரச சார்பற்ற நிறுவனகளின் பிரதிநிதிகள் மற்றும் தனியார் கல்வி நிறுவன பிரதிநிதிகள், இணையச்சேவை நிலையத்தின் உரிமையாளர்கள் பங்கு பற்றினர்


இக் கூட்டமானது  விசேடமாக தனியார் கல்வி நிலையங்கள், இன்யச்செவை நிலையங்கள், சிறுவர்களுக்கு ஆரோக்கியமான கற்றல், கற்பித்தல் சூழலை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் கூட்டப்பட்டதுடன் கூட்ட நிறைவின் பொது பின்வரும் தீர்மானங்கள ஏகமனதாக எட்டப்பட்டது.


01. தனியார் கல்வி நிலையங்களில் பிள்ளைகளின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படுவதுடன் சிறந்த சூழலை பேணல்


02. அவ்வாறான சூழலை 03 மத காலப் பகுதிக்குள் உருவாக்குதல்


03. தனியார் கல்வி நிலயங்க, இணையச்சேவை நிலையங்களை குழு மூலமாக கண்காணித்தல்


04. இவ்வாறான இடங்களில் பெண் சிறார்களின் பாதுகாப்பு இரவு நேர வகுப்புகள் குறித்து கவனம் செலுத்தி அவற்றுக்கான மாற்று வழியை ஏற்படுத்தல்


என்பதோடு இவைகள் குறித்து கவனம் செலுத்தாத போது அவற்றுக்காக சட்ட நடவிடிக்கை எடுக்கப்படும் எனவும் பிரதேச செயலாளர் தெரிவித்தார்.



DSC03522 DSC03517 DSC03519 DSC03521


 

No comments:

Recent Post

உலக சிறுவர் தின வினாவிடைப் போட்டி 2021 පුරවන්න என்பதை சொடுக்கவும்

Madawala News