இருமொழி தேர்ச்சி கொண்ட பிள்ளைகளை வளர்ப்பதற்கான நுட்பங்கள்.. Techniques for Promoting Bilingual/Multilanguage Skilled Children....

Can translate to read in your own language

Sunday, May 5, 2013

பெற்றோர்கள் அறிய வேண்டிய நோய்கள்

child 5வணக்கம் பெற்றோர்களே மீண்டுமொரு குழந்தைகளுக்கான பதிவில் தங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.இன்றைய பதிவில் பெற்றோர்கள் குழந்தைகளின் கற்கும் முறையில் எதிர் கொள்ள வேண்டிய நோய்கள்,அந்த நோய்கள் தோன்றுவதற்கான அறிகுறிகள் பற்றி அலசுவோம்.குழந்தை வளர்ப்பு  என்பது, இன்றைய வேகமான சூழலுக்கேற்ப அவர்களை உருவாக்கி வளர்ப்பதும் பெரும் சவாலானதாகத் தான் இருக்கிறது. நமது கல்வி முறை தான் நமது குழந்தைகளின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதாக இருப்பதால் பெற்றோர்களின் கவலையும் கவனமுமாக இருப்பது கல்வி முறை தான். இதனால் தான் ஆரம்பக் கல்வி முதல் கல்லூரிப் படிப்பு வரை இன்று பெரிய கவனம் செலுத்தப்படுகிறது.



 

 

பெற்றோர்கள் இருவரும் வேலைக்குச் செல்லும் வாழ்க்கை முறையில் குழந்தைகளின் கற்கும் திறன் குறித்து தேவைப்படும் கவனத்தை செலுத்த முடிவதில்லை. இவை குறித்து எண்ணற்ற ஆய்வுகளும் ஆலோசனைகளும் இருந்தும் கூட, அன்றாட வாழ்வின் வேகமான போக்கினாலும் அடிப்படையிலேயே பொறுப்பற்ற பெற்றோர்களாலும் இது போன்ற குழந்தைகள் இலக்கின்றி காலத்தின் போக்கில் எடுத்துச் செல்லப்படுகிறார்கள்.

 

ஒத்த வயதுடைய குழந்தைகளுடன் ஒப்பிடும் போது படிப்பது, எழுதுவது, தகவல் பரிமாற்றம், கவனிக்கும் திறன், பொருள்படுத்தும் திறன் மற்றும் கணிதம் தொடர்புடைய அம்சங்களில் நம் குழந்தைகளுக்கு ஏகப்பட்ட பிரச்னைகள்.சிறு வயதில் இந்த பிரச்சினைகள் பெற்றோரால் உணரப்படவில்லையென்றால் அந்த குழந்தையின் எதிர்காலமே கேள்விக்குறியாக மாறிவிடும் சாத்தியம் அதிகம் என்பதை இது போன்ற குழந்தைகளின் பெரும்பாலான பெற்றோர் உணருவதில்லை.இந்த கல்வி கற்கும் குறைபாடானது படிப்பில் துவங்கி, படிப்படியாக மனக்குறைபாடு, தாழ்வு மனப்பான்மை,மனச் சோர்வு, சக மாணவர்களுடன் உறவுச் சிக்கல் போன்ற பல்வேறு பிரச்னைகளுக்கு அவர்களை கொண்டு செல்லும் தன்மையை கொண்டுள்ளது.

 

 

 

அவர்களின் கற்கும் குறைகளை கண்டுபிடிப்பதில் ஆசிரியர்களின்பங்கு தலையாயது. சக மாணவர்களுடன் பழகும் தன்மை, ஒதுங்கும் மனப்பான்மை, கோபம், தகவல் பரிமாற்றம், புதியவற்றை அறிந்து கொள்ளும் ஆர்வம், ஒப்பிட்டு முடிவெடுக்கும் திறன் போன்றவற்றில் குழந்தையின் நிலை என்ன என்பதை ஆசிரியர்களால் மட்டுமே உணர முடியும். தற்செயலாக ஒரு குழந்தையிடம் இதுபோன்ற குறைபாடுகள் காணப்பட்டால் உடனே பெற்றோருக்குத் தெரிவிப்பதுஆசிரியரின் கடமையே.

 

 

 

குறைபாடுகள் உணரப்பட்டவுடன் பெற்றோர் குறிப்பிட்ட குறைபாட்டுக்கான சிறப்பு மருத்துவரின் உதவியை நாட வேண்டும். இப்போது முரண்பட்ட குறைபாடுகளைக் கொண்ட குழந்தைகளுக்கான பிரத்யேகமான பள்ளிகள் உள்ளன. இதில் இது போன்ற குழந்தைகளை சேர்ப்பதில் தயக்கமே கூடாது. L.K.G வகுப்புகளில் சேர்ப்பதற்கு முன் Pre - KG வகுப்புகளில் சேர்ப்பது கூட ஒரு விதத்தில் பிரச்னையை முதற்கட்டத்திலேயே அறிய உதவலாம். இந்த குறைபாடுகள் ஒரு நோயல்ல என்பதையும் சரியான கவனிப்பின் மூலமாகவும் நமது உடனடி நடவடிக்கைகளின் மூலமாகவும் இவற்றை களைந்து குழந்தையை மேம்படுத்தலாம் என்பதையும் பெற்றோர் உணர வேண்டும்.

 

கற்பதில் பொதுவாகக் காணப்படும் சில நோய்கள்

 

 

Dyspraxia


குழந்தைகளின் ஒருங்கிணைப்பற்ற செயல்கள், சப்தங்கள் பற்றிய பயம், மந்தமான மொழி வளர்ச்சி, போதுமான கவனமில்லாதிருப்பது, தூக்கத்தில் பிரச்னை ஆகியவைதான் Dyspraxia 



 

Tiskalkuliya

 

கணிதத்தை புரிந்து கொள்வதில் உள்ள பிரச்னை இது. வரிசைப்படுத்துவது, பெருக்குவது,வகுப்பது, சூத்திரங்களை புரிந்து கொள்வதில் பிரச்னைகள் இருந்தால் அது Tiskalkuliyaநோயின் அறிகுறிகளாக இருக்கலாம்.

 

Tiskirapiya

 

மனதில் நினைப்பதை எழுதுவதில் பிரச்னைகள் இருந்தாலோ கையெழுத்து மிகவும் மோசமானதாக இருந்தாலோ அது Tiskirapiya  நோயின் அறிகுறிகளாக இருக்கலாம்.

 

Dyslexia

 

படிப்பது, எழுதுவது மற்றும் உச்சரிப்பில் பிரச்னை இருந்தால் அது  Dyslexiaநோயின் அறிகுறியாக இருக்கலாம். தயக்கமான பேச்சு, வலது மற்றும் இடது அறிவதில் குழப்பம், வார்த்தைகளை உச்சரிப்பதில் குழப்பம், ரைம்ஸ் உரைப்பதில் சிரமம், குழப்பமான கையெழுத்து போன்றவை இதன் அறிகுறிகள்.

 

இந்த அறிகுறிகள் எல்லாம் நோய்களல்ல... சரிசெய்யப்படக் கூடியவை தான் என்பதை அறிந்து செயல்பட்டால் குழந்தைகள் தங்களது எதிர்காலத்தை சிறப்பாக வடிவமைத்துக்கொள்ளலாம் என்பதை பெற்றோர் உணர வேண்டும்.

 

நன்றி : பெயர்கூட புரியாத இந்த நோய்களுக்கு அருமையாக விளக்கங்கள் அளித்து உதவி புரிந்த மருத்துவ நண்பர் திரு.ஸ்டீபன் அவர்களுக்கு...

No comments:

Recent Post

உலக சிறுவர் தின வினாவிடைப் போட்டி 2021 පුරවන්න என்பதை சொடுக்கவும்

Madawala News