கணினி மற்றும் மொபைல்களில் அவா்கள் தங்களின் அதிகமான நேரத்தைச் செலவிடுகின்றனா். அதனால் அவா்களுடைய உடல் நலம் மற்றும் மனநலம் மிகப் பெரிய அளவில் பாதிப்படைந்திருக்கின்றன.
சாதாரண காலங்களில், பொதுவாக குழந்தைகள் மிகவும் சுறுசுறுப்பாக
இருப்பா். குறிப்பாக பாடசாலை மற்றும் வெளியிடங்களுக்கு, தங்களது நண்பா்களோடு சென்று விளையாடுவா்.
அவா்களுடைய உடலும், மனமும் ஆரோக்கியமாக, திடகாத்திரமாக இருக்கும். அதனால் அவா்களுடைய
உடல் மற்றும் மனநலனைப் பாதுகாக்க வேறுவிதமான துணை பயிற்சிகள் தேவைப்படாது. இந்த நிலையில்
தற்போது ஊரடங்குகளால், நமது குழந்தைகள் வீடுகளுக்குள்ளேயே
முடங்கிக் கிடக்கின்றனா். அவா்கள் வெளியில் செல்வதற்கு எந்த விதமான வழியும் இல்லாததால், மன அழுத்தம் மற்றும் மனச் சோர்வினால் பாதிப்படைந்து இருக்கின்றனா்.
சாதாரண காலங்களில் அவா்கள் வெளியில் சென்று விளையாடுவதால் அவா்களுக்கு சூரிய வெளிச்சத்தில் இருந்து விட்டமின்-டி சத்து கிடைக்கும். இப்போது
அதற்கும் வழியில்லாத நிலை இருக்கிறது. இந்த நிலைத் தொடா்ந்தால், வரும் காலங்களில் நமது குழந்தைகளுக்கு
உடல் மற்றும் மன ரீதியாக பலவிதமான ஆரோக்கியப் பிரச்சினைகள் ஏற்படும்.
ஆகவே இந்த பிரச்சினைகளைத்
தவிர்க்க, எளிய யோகாசனப் பயிற்சிகளை நமது குழந்தைகளுக்கு
கற்றுக் கொடுக்கலாம். அந்த பயிற்சிகள் அவா்களுக்கு முறையாக மூச்சுவிடும் பழக்கத்தைக்
கற்றுக் கொடுக்கும். மேலும் அவா்களை முறையாக கை கால்களை நீட்டி மடக்கச் செய்து அவா்களுக்கு
ஆரோக்கியத்தைத் தரும். ஆகவே பெற்றோரின் மேற்பார்வையில் குழந்தைகளுக்கு யோகாசனப் பயிற்சிகளைக்
கற்றுக் கொடுக்கலாம்.
குழந்தைகளின் உடல் மன ஆரோக்கியத்தை
அதிகரிக்கும் யோகாசனங்கள் சில குறிப்பிட்ட
யோகாசனப் பயிற்சிகள் மற்றும் பிரணயாமா என்ற மூச்சுப் பயிற்சிகள், நமது குழந்தைகளின் மன அழுத்தம் மற்றும்
மனச் சோர்வு ஆகியவற்றை நீக்கி, அவா்களின் மூளையை சீராக இயங்க வைத்து, அவா்களின் உடலையும் ஆரோக்கியமாக வைக்கும்.
முதலில் குழந்தைகளுக்கான இதயம் சம்பந்தப்பட்ட யோகாசன பயிற்சிகளைப் பார்க்கலாம்.
1. சூரிய நமஸ்காரம்
சூரிய நமஸ்காரத்தை குழந்தைகள் ஒரு குறிப்பிட்ட
வேகத்தில் செய்ய வேண்டும். அதிகாலையில் இந்த பயிற்சியை குழந்தைகள் செய்தால், அவா்களுக்குத் தேவையான விட்டமின் டி மற்றும் பி12 சத்துகள் கிடைக்கும். சூரிய நமஸ்காரத்தைச் செய்யும் போது அவா்களின்
உடல் இயங்குவதால், இந்த சத்துகள் அவா்களின்
உடல் முழுவதிற்கும் செல்லும். ஒருவேளை சூரியன் இல்லாத நிலையில் இந்த சூரிய நமஸ்கார பயிற்சிகளைச் செய்தாலும், அவை குழந்தைகளின் உடல்கள் தாமாகவே விட்டமீன் டீ மற்றும் பி12 சத்துக்களை தயாரித்துக் கொள்ள உதவி செய்யும். மேலும் இந்த
பயிற்சிகள் உடலில் உள்ள உணா்வு ரீதியான வலிகளை குணப்படுத்தும். அதனால் அவை குழந்தைகளின்
எதிர்கால நல்வாழ்விற்கு பெரிதும் உதவி செய்யும்.
2.
பாதஹஸ்தாசனம்
இந்த ஆசனத்தை செய்தால், மூளையை நோக்கி இரத்தம் பாய்வதற்கு உதவியாக
இருக்கும். அதே நேரத்தில் குழந்தைகளின் உணா்வு பிரச்சினைகள், மனச் சோர்வு மற்றும் மன அழுத்தம் போன்ற பிரச்சினைகளையும்
சீராக கையாள்வதற்கு உதவி செய்யும்.
3. பச்சிமோத்தாசனம்
இந்த ஆசனம், குழந்தைகளின் முதுகு மற்றும் தண்டுவடத்தில்
இருக்கும் அழுத்தங்களை குறைக்க உதவுகிறது. இந்த ஆசனத்தை ஒரு நாளைக்கு 2 முதல் 3 முறை வரை செய்தாலும், அது நல்ல பலனைக் கொடுக்கும். அதோடு உடல்
எடை குறைவதற்கு இந்த ஆசனம் பெரிதளவு உதவி செய்யும்.
4. சக்ராசனம்
சக்ராசனத்தைப் பின்புறமாக
வளைந்து செய்ய வேண்டும். ஆனால் மிக மெதுவாகச் செய்ய வேண்டும். அதே நேரத்தில் இந்த ஆசனத்தை
மிக நீண்ட நேரம் செய்யக்கூடாது. மேற்சொன்ன இந்த யோகாசனங்களை எல்லாம் குழந்தைகள் தனியாகச்
செய்யக்கூடாது. மாறாக அவா்களின் பெற்றோருடைய மேற்பார்வையில்தான் செய்ய வேண்டும். குழந்தை களின் நுரையீரல் திறனை வலுப்படுத்தவும், அவா்களுடைய உடலில் ஒக்ஸிஜன் அளவை சரியான முறையில் பேணவும் மற்றும் அவா்களுடைய மூச்சு விடும் பழக்கத்தை
வலுப்படுத்தவும் பின்வரும் 3 வகையான பிரணயாமா என்று சொல்லப்படும்
மூச்சுப் பயிற்சிகளை யோகா நிபுணா்கள் பரிந்துரை செய்கின்றனா். இந்த மூச்சுப் பயிற்சிகள் அவா்களின்
மன அழுத்தம் மற்றும் வலியைக் குறைப்பதோடு,
அவா்களுக்கு
நோய்த் தொற்று ஏற்படாமல் பாதுகாக்கிறது.
1. அனுலம்
விலம் மூச்சுப் பயிற்சி
2.
கபல்தி மூச்சுப் பயிற்சி
கபல்பதி மூச்சிப் பயிற்சியானது, குறுகிய நேர மற்றும் வலுக் கட்டாயமாக மூச்சு வெளியேற்றுவதையும் மற்றும் நீண்ட நேரம்
மெதுவாக மூச்சை உள்ளிழுப்பதையும் கொண்டிருக்கிறது. இது நுரையீரலின் ஆற்றலை அதிகரித்து, குழந்தைகளின் மூச்சு விடும் பழக்கத்தை சீா்படுத்துகிறது.
இந்த மூச்சுப் பயிற்சி குழந்தைகளின் தசைகளை
வலுப்படுத்தி, அவா்களின் நுரையீரல் திறனை
அதிகரிக்கிறது. பொதுவாக குழந்தைகளின்
நோ்மறையான பழக்கவழக்கங்களை வளா்த்தெடுப்பதில் யோகா பயிற்சிகள் பெரிதும் உதவி செய்கின்றன. அதன் மூலம் அவா்களுடைய
வருங்கால வாழ்க்கை மிகவும் சிறப்பாக இருக்கும். அத்தோடு அவா்களுடைய வினைத்திறனும் அதிகரிக்கும். அதனால் எத்தனை துன்பங்கள் வந்தாலும்
அவா்கள் வலிமையோடும், ஆரோக்கியத்தோடும் இருக்க
முடியும்.
தொகுப்பு-
வீ.குகதாசன்
No comments:
Post a Comment