இருமொழி தேர்ச்சி கொண்ட பிள்ளைகளை வளர்ப்பதற்கான நுட்பங்கள்.. Techniques for Promoting Bilingual/Multilanguage Skilled Children....

Can translate to read in your own language

Friday, May 10, 2013

அடம் பிடிக்கும் குழந்தையை அரவணைக்க...

indexநம் ஒவ்வொருவரது வீட்டிலும் குழந்தைகள் நேரம் காலம் தெரியாமல் அடம்பிடிப்பார்கள்.அவர்களை எப்படி அரவணைப்பது என்பதை இன்று காண்போம்.பொதுவாககுழந்தைகள் எதற்காக அடம்பிடிக்கிறார்கள்?.இதன் காரணங்கள்...
1.நியாயமான தேவைக்காக..(பசியின் போது பாலுக்காக).
2.தன் விருப்பத்திற்காக (விளையாட்டு பொம்மை மற்றும் பிறவற்றைப் பார்த்து அழுதல்).
3.அநியாயத்திற்கு அடம்பிடித்தல் (காய்ச்சலில் சிகிச்சை பெறும்போது 
ஐஸ்கிரீமுக்காக அழுதல், கண்ணில் பட்ட விளம்பரத்தைப் பார்த்ததும் அது கெட்டதாகவேஇருந்தாலும் அதைப் பெறுவதற்கு அழுதல்).



இப்படி குழந்தைகள் எதற்கென்றே தெரியாமல் எதற்கெடுத்தாலும் அடம்பிடிக்கும் பிரச்சினைக்கு சில தீர்வுகள்..


முதலாவதான நியாயமான தேவைகளை மறுக்கவே கூடாது. பெற்றோருகளுக்கு இயலாதபோதும் ஏதாவது ஒரு வகையில் கொடுத்து திருப்தியடைய செய்தே ஆக வேண்டும்.

இரண்டாவது காரணத்தில்  பணத்தின் அருமையை புரிய வைக்க வேண்டும். குழந்தை கேட்பது நியாயமானதாக இருந்து அதை வாங்கித் தருவதானாலும் அதைப் பெறுவதற்காக பணம் எவ்வளவு? அதற்கு எத்தனை நாட்கள் உழைக்க வேண்டும் என்பதைச் சொல்ல்லாம்.அல்லது அதை வாங்கித் தருவதனால்,அதற்கு சில வேலைகளை செய்யுமாறும் தூண்டலாம். உதாரணத்திற்கு செடிகளுக்கு தண்ணீர் விடுதல், துணிகளைதுவைத்தல், சமையலுக்கு உதவுதல் போன்றவைகளைச் செய்யச் சொல்லலாம்.இதனால் பிள்ளைகளுக்கு பணத்தின் அருமை புரியும். அதன் மூலம் அவர்களுக்கும் சுயமாக சம்பாதிக்கும் மன உணர்வு பெருகும்.தம்மிடம் பணம் இருக்கிறதென்பதற்காக பிள்ளைகள் ஆசைப்படுவதையெல்லாம் வாங்கி தருகின்ற பெற்றோர்கள்தான் ஊதாரித்தனத்தை மறைமுகமாக கற்றுத் தருகிறார்கள்.





மூன்றாவது காரணத்தில் மிகுந்த கவனமாக இருத்தல் வேண்டும். பிள்ளை கேட்பதில் முற்றிலும் தவறானது என்ற முடிவடுத்து விட்டால் “வாங்க முடியாது” என்று தெளிவாகச் சொல்லிவிட வேண்டும்.உடனே அழுதல், சண்டையிடுதல், உருகுதல் போன்ற வேஷங்கள் நடைபெறும்.அப்போதும் முடிவை மாற்றக்கூடாது. “அவை உனக்குக் கெடுதல் தரும்”என்பதை மட்டும் வலியுறுத்தலாம்.சில நேரங்களில் சுற்றி உள்ள பிற மனிதர்களைக் கவரும் வண்ணம் ஆர்ப்பாட்டம் நடைபெறும். பெற்றோருக்கும் “சரி போனால் போகட்டும் விட்டு விடலாம்” என்ற மனநிலை வரும். ஆனால் அப்போதும் வளைந்து கொடுக்கக்கூடாது.மறுப்புச் சொல்லிவிட்ட பிறகு அதில் உறுதியாக இருக்க வேண்டும். இந்த உறுதியில்லா விட்டால் தவறான விஷயங்களையும் அடம்பிடித்துச் சாதிக்கலாம் என்ற மன உணர்வு உருவாகிவிடும். இதைச் செய்யும்போது குழந்தைகள் மீது இரக்கம் இல்லாத கல் நெஞ்சமா? என்கிற அளவிற்கு சூழ்நிலை அமையும். இருப்பினும் அது பிள்ளையின் நன்மைக்கே என்பதால் மறுப்பிலிருந்து மாறக்கூடாது. 

இறுதியாக பெற்றோர்கள் வீட்டைவிட்டு வெளியில் சென்று திரும்பி வரும் போதெல்லாம் தவறாமல் எதையாவது வாங்கி வருவது போன்ற பழக்கங்களை மாற்ற வேண்டும்.அப்பபழக்கத்தால் எப்போதும் எதையாவது எதிர்பார்க்கும் மன நிலை பிள்ளைகளுக்கு வந்துவிடும்.எனினும் வெளி ஊரோ அல்லது வெளிநாடோ சென்று திரும்புகையில்எதையாவது வாங்கி வருவதில் தவறேதும் இல்லை.

No comments:

Recent Post

உலக சிறுவர் தின வினாவிடைப் போட்டி 2021 පුරවන්න என்பதை சொடுக்கவும்

Madawala News