வண்ணத்துப்பூச்சிப் பூங்காவின் (Butterfly Garden ) நாம் வேண்டும் உலகம் எனும் தொனிப் பொருளில் சிறார்களின் கலை நிகழ்வு 05.05.2013 இன்று மு. ப. 9.30 மணிக்கு ஆரையம்பதி நந்தகோபன் மண்டபத்தில் இடம்பெற்றது. தில் பிரதம அதிதியாக இலங்கை ரூபவாகினி கூட்டுத்தாபன சிரேஷ்ட அறிவிப்பாளர் திரு S . மோசஸ் அவர்களும் சிறப்பு அதிதியாக CRPO மாவட்ட இணைப்பாளர் என்ற வகையில் நானும் ( வீ . குகதாசன்) கலந்து கொண்டேன் அத்துடன் சிறார்கள், பெற்றோர் அதிபர்கள், ஆசிரியர்கள், போன்றோர் கலந்து கொண்டனர்.(படங்கள் இணைக்கப்பட்டுள்ளது) இந்நிகழ்வை அந்நிறுவனத்தின் இயக்குனர் அருட்தந்தை, போல் சற்குண நாயகம் அவர்கள் தலைமை தங்கினார். நிகழ்வு முழுக்க முழுக்க் பிள்ளைகளுக்கானது. பிள்ளைகளால் தரிக்கப்பட்டு அவர்களின் ஆற்றல் திறன்கள், மனோபாவங்கள், கருத்துகளை வெளிக்காட்டும் படியாக அமைந்திருந்தது. முதலில் பிள்ளைகளின் பூங்கா கீதத்துடன் நிகழ்வு ஆரம்பமானது இதில் அருட் தந்தை அவர்கள் தனது தலைமை உரையில் சுமார் 15 வருட காலமாக பிள்ளைகளின் உடல்,உளத்தேவைகளை உணர்ந்து மட்டக்களப்பின் கிராமங்கள் தோறும் சென்று பிள்ளைகளை அழைத்து வந்து அவர்களின் அட்ட்ரல்களை வெளிக்கொண்டு வருவதோடு பிரச்சனைகளையும் அறிந்து ஒருவித சுகப்படுத்தல் மூலமான பணியினையே தமது வன்னத்துப்போச்சிப் பூங்கா செய்தி வருவதாகவும், இதனை அனைவரும் அறிந்து கொள்ளும் நோக்கில் ஒரு விழிப்புணர்வு நிகழ்வாக இதனை நடத்துவதாகவும் குறிப்பிட்டதுடன் இன்று பெரும்பாலான துஸ்பிரயோகங்கள் வீடுகளில் நிகழ்வதாகவும் அதில் 40 வீதமானவை பாலியல் உறவு சார்ந்த துஸ்பிரயோகம் எனவும் அவற்றை இல்லது செய்வது பெற்றோர், ஆசிரியர், மற்றும் சமூகத்தினரின் பொறுப்பு எனவும் எமது பிள்ளைகளை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும் எனவும் புரிந்து கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
தொடர்ந்து பிள்ளைகளின்
1. கதைக்கு அபிநயம்
2. அன்னை மடியில் நடனம்
3. ஏனோ ஏனோ - நடனம்
4. வண்ண வண்ண - பாடல்
5. கனவுகள் உண்டு - நடனம்
6. பழங்காலத்து - நடனம்
7. வாரும் அன்பு - நடனம்
போன்ற தொனிப்பொருளிலான நிகழ்வுகள் சிறார்களினால் நிகழ்த்தப்பட்டது. இந்நிகழ்வின் மூல அவர்கள் கேட்கும் ஒரே ஒரு விடயம் நாம் வேண்டும் உலகம் எமக்கு வேண்டும் என்பதே ஆகும்.
தொடர்ந்து நிகழ்வும் இறுதியில் உரையாற்றிய திரு S . மோசஸ் அவர்கள் பிள்ளைகளுக்கு கல்வியின் முக்கியத்தை பெற்றோர் உணர வைக்க வேண்டும் எனவும் வறுமை என்கின்ற காரணம் ஒன்றினால் அது இடை நடுவே நின்று விடக்கூடாது எனவும் அதனை பெற்றுக் கொடுப்பதற்கென உதவி புரிகின்ற அரச , அரச சார்பற்ற நிறுவனங்களின் உதவிய நாடி பிள்ளைகளின் தேவையை உணர்ந்து செய்து கொடுப்பது பெற்றிரின் பொறுப்பாகும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.
இறுதியாக வண்ணத்துப் பூச்சி பூங்காவில் தமது ஆற்றல் கலைகளை கற்றுக் கொண்ட அனைத்து சிறர்களுக்குமான சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டு நிகழ்வு இனிதே நிறைவு பெற்றது.
No comments:
Post a Comment