இருமொழி தேர்ச்சி கொண்ட பிள்ளைகளை வளர்ப்பதற்கான நுட்பங்கள்.. Techniques for Promoting Bilingual/Multilanguage Skilled Children....

Can translate to read in your own language

Wednesday, April 10, 2013

கோரளைப்பற்று பிரதேச செயலக சிறுவர் கண்காணிப்புக் குழுக் கூட்டம்

02கோரளைப்பற்று  பிரதேச செயலக சிறுவர் கண்காணிப்புக் குழுக் கூட்டம்  08.04.2013 அன்று பி .ப 2.30 மணிக்கு பிரதேச செயலாளர் திருமதி தெ. தினேஷ் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. ஒரு நிமிட இறை வணக்கத்துடன் ஆரம்பமான இக்கூட்டத்தில் கல்குடா வலயக் கல்விப்பணிப்பாளர், கிராம உத்தியோகத்தர்கள், 
போலீஸ் பொறுப்பதிகாரி, டியூஷன் சென்டர் உரிமையாளர்கள், இணையச்சேவை நிலைய உரிமையாளர்கள், ஆசிரியர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டதுடன். ,இக்கூட்டத்தை சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தரும், DMC குழுவின் செயலாளருமான திரு A . அழகுராஜ் அவர்கள் கொண்டு நடாத்தினார். 


தொடர்ந்து பிரதேச செயலாளர் அவர்கள் உரையாற்றுகையில் சிறுவர் நலன் சம்மந்தமாக அனைத்து உத்தியோகத்தர்களும் கவனத்தில் கொள்ள வேண்டும் எனவும் , சிறுவர்கள் பாதிக்கப்பட முன்னர் பாதுகாக்கப்பட வேண்டும். அந்த வகையில் மாவட்டட சிறுவர் அபிவிருத்திக் குழு மூலம் முவைக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்கள், இணையச்சேவை நிலையங்கள் என்பன பிரதேச செயலக மட்டத்தில் கண்காணிக்கப்பட வேண்டும் என்பதற்கு இணங்க இக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தனியார் கல்வி நிலையங்களின் மாணவர்களின் நலன் கருதி சுகாதார வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும் எனத் தெரிவித்தார்.   


அதனைத் தொடர்ந்து சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோத்தர் திரு அழகுராஜ் அவர்களால் பிரதேசத்தில் உள்ள தனியார் கல்வி நிலையங்கள், இணையச்சேவை நிலையங்கள் தொடர்பான புகைப்பட அளிக்கை ஒன்று செய்யப்பட்டது. அவற்றில் சில குறைபாடுகள் சுட்டிக்காட்டப்பட்டதுடன் இது தொடர்பாக திருத்தங்கள் மேட்கோள்ளப்பட வேண்டும் என்பதற்கு அமைய பின்வரும் விடயங்கள் பிரதேச செயலாளரால் முன்வைக்கப்பட்டது. 


உள், வெளியாக சுற்றுப்பிரச்சூழல் பொருத்தமானதாகவும், சுகாதார வசதி உள்ளதாகவும் அமைதல்


கல்விச் செயற்பாடுகள் நடைபெற்று முடியும் வரை பெண் ஊழியர் ஒருவர் தரித்து நிற்றல்


இரவு நேர வகுப்புக்களை முடியுமான வரை தவிர்த்தல்


மாணவர் எண்ணிகையினை கருத்தில் கொள்ளுதல்


பூரண விடுமுறை நாட்களிலும். ஞாயிற்றுக் கிழமைகளிலும் வகுப்புகள் நடத்தப்படலாகாது எனக் குறிப்பிட்டதுடன்


இணையச்சேவை நிலையங்களில் பாடசாலை நேரங்களில் மாணவர்களை அனுமதிக்க கூடாது அத்துடன் அந்நிலையங்களில் பதிவேடுமலை மேற்கொள்ளல், சிறுவர்க்க பாவிக்கும் இடத்தில் மறைப்புகள் அகற்றப்படல் வேண்டும். மற்றும் கண்காணிப்பு பொறிமுறையினை மேற்கொள்ளல் போன்ற விடயங்கள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது. 


போலீஸ் பொறுப்பதிகாரி அவர்களால் வகுப்பு ஆரம்ப முடிவு நேரங்களில் பாதைக்கு தடையாக செல்கின்ற நபர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.


அதனைத்தொடர்ந்து சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தரின் நன்றியுரையுடன் பி ப. 4.30 மணியளவில் கூட்டம் இனிதே நிறைவு பெற்றது.01 03 04

1 comment:

N.Arul said...

This is very good afford. Nice

Recent Post

உலக சிறுவர் தின வினாவிடைப் போட்டி 2021 පුරවන්න என்பதை சொடுக்கவும்

Madawala News